தங்கமீன்கள் திரைபடத்தின் முன்னோட்டம் வெளியான நிமிடத்தில் இருந்தே எனக்கு அதை காண வேண்டும் என்ற ஆர்வம் தலைக்கேறியது. திரைப்படம் வெளியான நாள் வரை அதன் வெளியாகும் நாள் குறித்து பல தகவல்கள் வெளியான பொழுதும் பொறுமையுடன் கண்டிப்பாக திரை அரங்கம் சென்றே அனுபவிக்க வேண்டும் என்ற முடிவில் இருந்தேன். திரைப்படம் கண்டிப்பாக வெளியாகிறது என்ற செய்தி வெளியான பிறகும் எனக்குள் ஒரு வருத்தம் சிங்கப்பூர்ல இந்த திரைப்படம் வெளியிடுவார்களோ என்ற கேள்வி தான். நல்ல வேலையாக எனக்கு ஏமாற்றம் இல்லாமல் ஒரு திரை அரங்கம் (கோல்டன் டிஜிட்டல்) நாளைக்கு மூன்று காட்சிகள் ஒளிபரப்பிய தகவல் கேட்டு மிக்க மகிழ்ச்சி அடைந்தேன்.

தங்கமீன்கள் வெளியான பிறகு நான் பார்க்க செல்லும் முன் யாருடைய மதிபிட்டையும் கேட்கலாம் செல்ல வேண்டும் என்று எண்ணினேன். அனால் அது அவ்வளவு சுலபம் இல்லை என்பதை உணர்ந்தேன், வெளியான ஐந்து மணி நேரத்தில் ஏக போக விமர்சங்கள் கேள்வி பட்டேன். சில ஆங்கில பத்திரிகைகளை தவிர தமிழ் பத்திரிகைகள் உட்பட அனைத்து விமர்சகர்களும் நல்ல விமர்சனம் அளித்தனர். விமர்சனங்களை கேட்டதும் எனது ஆவல் மிகவும் அதிகம் ஆனது. தங்க மீன்களை பார்க்க செல்ல தயார் ஆனேன், அனால் வேலை மற்றும் சில தவிர்க்க முடியாத காரணத்தால் வெளியான உடனே செல்ல முடிய இல்லை. ஒரு வாரம் முடிவடைந்த நிலையில் நேற்று உறுதியாக செல்ல வேண்டும் என்று முடிவு செய்தேன். திரை அரங்கந்தின் தொலைபேசி என்னை தேடி எடுத்து விசாரித்தேன். ஒன்பது மணிக்கு ஒரு ஒளிபரப்பு இருபதாக தெரிந்தது, அலுவலகம் முடிந்த உடன் செல்ல முடிவு செய்தேன்.

தங்க மீன்களை பார்க்க செல்ல போகிறோம் என்ற ஆனந்தம் பெருகியது. அலுவலகம் முடிந்த உடனே திரை அரங்கம் சென்று ஒளிபரப்பு நேரத்தை உறுதி செய்தேன். பின்னர் சென்று எனது இரவு உணவை உட்கொண்டேன். பாத்து நிமிடத்துக்கு ஒரு முறை எனது கை கெடிகாரத்தை பார்த்து கொன்றுந்தேன். மணி எட்டு முப்பதை எட்டியது நேரே சென்று நுழைவுச்சீட்டு பெரும் இடத்தை அணுகினேன். எனக்கு மிக பெரிய ஏமாற்றம் காத்திருந்தது, நுழைவுச்சீட்டு தரும் நபர் சொன்னது எனக்கு மிக்க வருத்தத்தை தந்தது. அண்ணா நீங்க ஏன் வாலிபர் சங்கம் போக கூடாது படம் நல்ல இருக்கு தங்க மீன்கள் காலைல இருந்து ஒரு காட்சியும் ஒளிபரப்ப படவில்லை என்றார். அதற்கு என்ன பதில் சொல்லுவது என்று எனக்கு தெரியவில்லை மனம் உடைந்து தங்கமீன்கள் விளம்பரத்தை பார்த்து நின்றேன்.

தங்க மீன்கள் ஒளிபரப்பவில்லை என்பதை விட எனக்கு வருத்தம் என்னவென்றால் யாருமே படத்தை பார்க்க வரவில்லையே என்ற வருத்தம் வெகுவாக இருந்தது. நான் இருந்த உறுதியை கவனித்த திரை அரங்க நிர்வாகி என்னிடம் சிறிதுநேரம் காத்திருக்கவும் மற்றும் வேறு யாரேனும் தங்க மீன்கள் நுழைவுசீட்டு பெற்றால் நான் திரை இடுகிறேன் என்றார். அந்த வார்த்தைகள் எனக்கு சிறு நம்பிக்கை வந்தது. நான் இன்னும் இரு நுழைவுசீட்டு பெரும் ஆசமிகாக காக்க ஆரம்பிதேன். நேரம் ஒன்பது மேல் ஆகியும் ஒருவரும் வரவில்லை எனக்கு நம்பிக்கை மறுபடியும் மங்கியது. ஒரு பத்து நிமிடம் கழிந்து ஒரு சீனா பெரியவர் நுழைவு சீட்டு பெரும் இடத்தில் வாலிபர் சங்கம் சீட்டு வாங்க வந்தார். அவரிடம் சென்று அய்யா நீங்கள் தங்க மீன்கள் படம் பார்த்தாகிவிட்டதா என்று வினவினேன், அவர் இல்லை அப்பா என்றார். தாமதிக்காமல் அவரிடம் சொன்னேன் தங்க மீன்கள் படம் மிக அருமையான படம் நீங்களும் பார்த்தால் உங்களுக்கும் பிடிக்கும் என்றேன். அவர் என்னை மேலும் கீழும் பார்த்துவிட்டு அப்படி என்ன விஷயம் அந்த படத்தில் இருக்கிறது என்றார் அவர். நான் அப்பாவுக்கும் மகளுக்கும் இடையில் நிகழும் ஒரு பாச பிணைப்பை படமாக எடுத்திருக்காங்க அப்படி என்று சொன்னேன். மறுபடியும் அவர் என்னை பார்த்தார் அதன் பின் அவர் சொன்ன வார்த்தை என்னால் மறக்க முடியாதா வார்த்தைகள். சரி தம்பி நீ சொல்றனு நான் வரேன் என்றார்.

அவர் சொன்ன அந்த வார்த்தைகள் எனக்கு குடுத்த ஆனந்தத்துக்கு அளவில்லை. இருவரும் சென்று நிர்வாகியை அணுகினோம் அவரும் நுழைவுசீட்டு கொடுத்தார். முழு திரை அரங்கிலும் நாங்கள் இருவர் மட்டும் தான், பெரியவர் என்னை பார்த்து (are you sure they will show the movie ? you are just kidding me la ?) என்றார் எனக்கு என்ன சொல்லுவது என்று தெரியவில்லை. சிறுது நேரம் கழிந்தது பொறி இயக்குநர் அரங்கத்தில் உள்ள சிறு அறையுனுள் சென்று திரை இட ஆயத்தம் ஆனார். எனக்கு ஏற்பட்ட ஆனந்தத்தை கை தட்டி வெளிபடுதினேன் பெரியவர் என்னை பார்த்து நகைத்தார்.

ஆனந்த யாழை பாடலில் ஆரம்பித்த படம் என்னை அப்படியே ஒரு வித மயக்கத்தில் தள்ளியது. நான் ஒரு வேறு கிரகத்துக்கு சென்ற ஒரு நினைவு என்னுள் ஏற்பட்டது. தங்க மீன்களை உணர்ந்தேன் இவ்வளவு நாளில் நான் இப்படி ஒரு படத்தை அனுபவிக்க வில்லை. எனக்கு அந்த படத்தை திரை அரங்கில் பார்க்க உதவிய சீனா பெரியவரை பார்த்து கொண்டே தங்க மீன்களை அனுபவித்தேன். என்னை விட அவர் மிகவும் நுனுக்கமாக அனுபவித்தார் என்பதை அவர் கண்ணில் இருந்த சிறு கண்ணிர் துளி காட்டியது. படம் முடிந்ததும் பெரியவர் என்னிடம் சொன்னது பெருமையாக இருந்தது “Never know that Indian movie have this much emotion and all la !!! such a nice movie hats off to the director man”. அப்பொழுது நான் உணர்ந்தேன் தங்க மீன்களின் வெற்றியை. நீண்ட நாட்களுக்கு பிறகு நான் உணர்ந்து பார்த்த திரை படம். ராம் அவர் இப்படி ஒரு படைப்பை கொடுத்ததற்கு பல கோடி நன்றி சொன்னாலும் தகும். அதை போல யுவன் ஷங்கர் ராஜாவின் இசை அமிர்தம், முத்து குமார் அவர்களின் வரிகள் அருமையோ அருமை. ஒளிப்பதிவாளர், ஷெல்லி, சாதனா அனைவருமே அவர்களின் பாத்திரத்தில் வாழ்திருகிறார்கள். இவ்வாறு அனுபவிக்கும் படியாக ஒரு திரை படம் ஏற்பட காரணமாக இருந்த கௌதம் அவருக்கும் வாழ்த்துகள் மற்றும் நன்றி.